2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். கடன் கொடுத்தால் திரும்பி வராது. வேலையில் உங்களின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. குழந்தைகளை பிரிந்து இருப்பீர்கள். அவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். பொருளாதார நிலைகள் சரியில்லை. வருமானம் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. யாரையும் நம்பி இருக்காதீர்கள். தேவை இருந்தால் பயணம் செய்யுங்கள். கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. உயர்கல்வியில் ஒரு பிரேக் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதலில் ஒரு பக்கம் வெற்றி அடைவது போன்ற தோற்றம். இன்னொரு பக்கம் அதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். திரும்ப வராது. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழில் செய்தால் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். அதனால் எல்லாவிதத்திலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். இந்த வாரம் முழுவதும் பிரம்ம தேவர் மற்றும் நந்தியம் பெருமானையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 2 July 2024 3:30 AM GMT
ராணி

ராணி

Next Story