2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர் அல்லது டிராவல் இருக்கிறது. புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றி பெறும். நம்முடைய ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஓரளவுக்கு வருமானங்கள் உண்டு. பெரிதாக உடல் உழைப்பு இல்லாமல் வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லாவிதமான உறவுகளையும் சரியான முறையில் மெயின்டைன் செய்யாவிட்டால் அவர்களால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சினைகள் ஏற்படுவதுடன், அவர்கள் நம்மை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கடுமையான போராட்டத்திற்கு பிறகு இருக்கிறது. சொத்துக்கள் விற்பனையாகும். டாக்குமெண்டில் பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே சுமார். வேலையில் உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் பெரிதாக ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. அதனால் வேலையில் கவனமாக இருங்கள். நீங்களும் கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வாரம் முழுவதும் விநாயகர், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 July 2024 6:58 AM GMT
ராணி

ராணி

Next Story