2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். இறையருளை கூட்டுங்கள். இந்த வாரத்தில் வருமானங்கள் இருக்கும் அதே அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. வாய்ப்பு இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் செய்யுங்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பெரிதாக லாபம் இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் பிரிந்து போவார் அல்லது திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். கணவன் - மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். உங்கள் வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து தக்க வைத்துக்கொள்ள பாருங்கள். பார்க்கும் வேலையை விட்டு வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த அளவுக்கு வேலையில் கவனம் செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு ஜெயிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்பு அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Sept 2024 9:09 AM IST
ராணி

ராணி

Next Story