2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கிரகங்கள் சாதகமாக இருப்பதால், ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையில், நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. வேலையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பணிபுரிகிறீர்களோ, அந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றினாலும் சரி, சொந்தமாக தொழில் செய்தாலும் சரி, உங்களுடைய தொழில் மற்றும் வேலை கை கொடுக்கும். தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். கையில் பணம் தாராளமாக இருக்கும். யாருடைய பணத்தையாவது நீங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு நிறைய உண்டு. உறவுகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குறிப்பாக உங்களுடைய இளைய சகோதர சகோதரிகள் விஷயத்தில் எதிர்பாராத நன்மைகள் உண்டு. இந்த வாரம் முயற்சிகளைப் பெரிதாக எடுங்கள். முயற்சி செய்தால் மட்டும்தான் உங்களுடைய வெற்றி மிகப் பெரிய அளவில் உறுதியாகும். உற்பத்தி சார்ந்த துறையில் இருக்கிறீர்கள் என்றால், விற்பனை நன்றாக இருக்கும். நீங்கள் விவசாயத்தில் இருந்தால், நல்ல மகசூல் உண்டு. தொழில் சீராக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் சிவன் கோவிலில் இருக்கக்கூடிய பிரம்மாவையும், விநாயகரையும் முழுமையாக வழிபட்டு வாருங்கள்.
