2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. இதுவரை வேலையில் இருந்த பிரச்சினைகளும், போராட்டங்களும் குறையும். தொழில் மற்றும் வேலையில் சொல்ல முடியாத கஷ்டங்கள் இருந்தால் அந்தநிலை மாறும். வேலையை பற்றி இருந்த பயம், பதட்டம், மனக்குழப்பம் இதெல்லாம் நீங்கும். தொழிலில் லாபம், நஷ்டம் இரண்டும் இல்லாமல் சுமாராக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி அடையும். வாழ்க்கையில் யாரை நம்பி இருக்கீங்களோ, அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களுடைய எண்ணங்களும், சிந்தனைகளும் செயலாக்கம் பெறும். எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்தப் பயணத்தால் நன்மை உண்டாகும். திருமணத்திற்கான வாய்ப்பும், அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெறும். கலைத்துறையில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பாராத நட்பு கிடைக்கும். அவர்களால் வாழ்க்கையில் மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். கணவன் அல்லது மனைவி இருவரில் யாருக்காவது ஒருவருக்கு தேவையில்லாத செலவுகள், வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தில், நரசிம்மரையும், விநாயகரையும் வழிபட்டு வாருங்கள்.

Updated On 13 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story