2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் திருமணத்திற்கான வாய்ப்புகளும், பேச்சுவார்த்தைகளும் கைகூடும். தொழில் நன்றாக இருக்கும். லாபமும் வருமானமும் உண்டு. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும். இரண்டாவது திருமணம் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம். வீசா, பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டுத் தொடர்புகளுக்கான விண்ணப்பங்கள் இந்த வாரம் வந்து சேரும். ஜூன் 7ஆம் தேதிக்குப் பிறகு நிதி நிலைமை மேம்படும், பணப்புழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களிடமிருந்து பணம் வந்து சேரவும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உதவி செய்வார்கள். இறைவனின் அனுகூலம் உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகளும், பயணங்களும், அதன் மூலம் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களாலும், இளைய சகோதர சகோதரிகளாலும் நன்மைகள் ஏற்படும். பங்குச்சந்தை முதலீடுகளில் அவசரப்பட வேண்டாம்; பொறுமை தேவை. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, வேலை இருக்கும். ஆனால், கடினமாக உழைக்க வேண்டும். எட்டு மற்றும் 12-ம் இடங்களை சனி பார்ப்பதால், கடின உழைப்பு அங்கீகரிக்கப்படும். மேலும், வேலையில் இடமாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில், கவனமாக இருங்கள். இந்த வாரம் சிவன் மற்றும் முருகனை தரிசனம் செய்து வாருங்கள்.

Updated On 3 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story