2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாம், பன்னிரண்டாம், மூன்றாம் இடங்கள் மீது இருப்பதால், வேலையில் மன உளைச்சல், பிரச்சனைகள் வரலாம். வேலையை விடுவது பற்றிய எண்ணங்கள் தோன்றலாம், பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்கள். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே கடன் வாங்குங்கள், இல்லையெனில் தவிர்க்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் அல்லது செக்யூரிட்டி கொடுப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. பொருளாதாரம் சாதாரணமாக இருக்கும். கையில் பணம், பொருள் இருக்கும். இந்த வாரம் முழுவதும், சிவ பெருமானையும் மகாவிஷ்ணுவையும் வழிபடுவது நல்லது.

Updated On 10 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story