2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல லாபமும், வருமானமும் கிடைக்கும். சேவை ஸ்தானத்தில் சனி பகவான் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் தொழில் மாற்றம் அல்லது வேறு கம்பெனிக்கு மாறும் எண்ணம் உள்ளவர்கள் இந்த வாரம் முயற்சி செய்யலாம். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களும் வெற்றி பெறலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. உயர்கல்வி பரவாயில்லை. உங்கள் அந்தஸ்தும், புகழும் கூடும். எதிர்பாராத நட்புகள் உருவாகும். குறிப்பாக ஆண் நண்பர்களால் நன்மை உண்டாகும். இரண்டாம் திருமணம் செய்ய முயற்சிப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் தவணைகளில் வந்து சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும், அந்தஸ்தும் தொடரும். விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் தொடர்பு அதிகரித்து செல்வாக்கு கூடும். பொதுவாக இந்த வாரம் நிதி நிலைமை நன்றாக இருக்கும். பங்குச்சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இந்த வாரம் சிவன் மற்றும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
