2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வேலைவாய்ப்புகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும். தொழில் மாற்றம், கம்பெனி மாற்றம் செய்ய நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம். வீடு மாற நினைப்பவர்கள் இந்த மாதம் மாறலாம். நீண்ட நாட்களாக உங்கள் சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால், இந்த வாரம் விற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உறவுகளுடன் நல்லுறவைப் பேணுங்கள், இல்லையெனில் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சனைகள் ஏற்படலாம். நல்ல உறவுகள் உங்களை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்களை விட்டு நீங்கள் பிரிந்திருக்க வேண்டிய சூழல் வரலாம். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் பெரிய விஷயங்கள், புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். அனைத்தும் வெற்றி பெறுவது போல தோன்றினாலும், வெற்றியின் வாய்ப்புகள் குறைவு. தேவையற்ற மனக்குழப்பங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள், வெற்றி பெறுவீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறாமல் இருந்தால், இந்த வாரம் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம் மற்றும் ஆலய தரிசனம் உண்டு. பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். லாபகரமாகத் தோன்றினாலும், சுமாராகவே இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும். துர்க்கை மற்றும் அம்பாள் வழிபாடு நல்லது.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story