✕
x
2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு செயலை செய்ய வேண்டுமானாலும் ஒருவர் உந்துதல் கொடுத்தே செய்யும்படி இருக்கும். மிகவும் மெதுவாகவே செயல்களில் ஈடுபடுவீர்கள். பேச்சில் தவறுகள் ஏற்படும். செல்போன், இயர்போன் அல்லது வாகனங்களில் பழுதுகள் ஏற்படும். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். வீட்டிலிருக்கும் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பணக்கஷ்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் வரலாம். குறிப்பாக 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களிலும் பிரச்சினைகள் மிகவும் அதிகமாக இருக்கும். பிடித்த தெய்வத்தை வேண்டிக்கொண்டு நாளினைத் தொடங்குவது நல்லது. அதேபோல் சந்திரனுக்கு நெல் போட்டு விளக்கு ஏற்றலாம். அனைத்து செயல்களிலும் மிகவும் ஜாக்கிரதையுடன் இருங்கள்!

ராணி
Next Story