2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் சுமாராக இருக்கும். அரசாங்கத்தால் நடக்கவேண்டிய காரியங்கள் நடக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களை அனுசரித்து போகாவிட்டால் பிரிவுக்கு வாய்ப்புள்ளது. வேலை உயர்வு, சம்பள உயர்வு உண்டு. லோன் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உயர் கல்விக்கு முயற்சிக்கலாம். எதிர்பாராத தெய்வ தரிசனம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம், சம்பாத்தியம் உண்டு. அப்பாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். முதலீடு செய்யாவிட்டால் விரயங்கள் ஏற்படும். வெளிநாட்டுக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். நீண்ட பிரயாணத்திற்கான வாய்ப்புகள் அமையும். விநாயகர் மற்றும் சிவ ஆலயத்திலுள்ள அம்பாளை வழிபாடு செய்ய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.

Updated On 8 Jan 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story