2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வருமானங்கள், சம்பாத்தியங்கள் நிறைய உள்ளன. அதேநேரம் அதற்கு ஏற்ற செலவினங்களும் உள்ளன. வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். போக்குவரத்து, வண்டி, வாகனங்கள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் தொழில் சரியாக இருக்காது. விற்க நினைக்கும் சொத்துக்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. குருவும், சனியும் உங்களது சர்வீஸ் ஸ்தானத்தை பார்ப்பதனால் உங்களது வாழ்க்கையில் வருமானம், முன்னேற்றம், லாபம் இருக்கும். வழக்குகள் இருந்தால் வெற்றியடைய வாய்ப்புகள் உண்டு. எதிரிகளை ஜெயிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக உள்ளது. கௌரவம், அந்தஸ்து, புகழ் ஏதோ ஒரு ரூபத்தில் காப்பாற்றப்படும். பெரிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் காத்திருந்து தொடங்குவது நல்லது. முருகன் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய தாயாரை வழிபடுவது ஏற்றத்தை தரும்.
