2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. பொருளாதாரம் நன்றாக இருந்தால் முதலீடு செய்யுங்கள். பெரிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். உறவினர்களால் தேவையற்ற மன உளைச்சல்கள், மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். அவசியம் இருந்தால் பயணம் செய்யுங்கள். புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்கள் காதலில் ஒரு புறம் வெற்றி அடைவது போன்ற தோற்றம், இன்னொரு புறம் பிரேக் அப் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் வரும். வேலையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். நீண்டதூர பயணம் அல்லது எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோசம், அவர்களால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். இந்த வாரம் முழுவதும் சிவ வழிபாடு மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மைர வழிபடுவது கெடுபலன்களை நீக்கும்.
.
