2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் பிசினஸ் போன்ற தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான மாற்றங்கள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். பார்ட் டைம், கரஸ், ஆன்லைன் போன்ற ஏதோ ஒன்றில் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஆகியவை உண்டு. வேலையில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள். பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலங்களில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள். சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்தி பெருமானை வழிபாடு செய்தால் ஏற்றம் பெறுவீர்கள்.
