✕
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வேலையில் நன்றாக செயல்பட்டாலும் ரிசல்ட் நன்றாக இருக்காது. இதனால் பொருளாதாரத்தில் அடி விழும். வேலை ஸ்தலத்தில் உங்களுக்கும் வயதில் பெரியவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீட்டிலேயும் கணவன் - மனைவியிடையே சிறுசிறு சண்டைகள் வரலாம். இதனால் மனநிம்மதி கெட்டுபோய் எரிச்சல் உண்டாகும். இதனை தவிர்க்க சந்திரனுக்கு நெல் மற்றும் வெல்லம் போட்டு விளக்கேற்றுங்கள். தெளிவாக பேசினாலும் பயன்படுத்துகிற உதாரணங்களால் பிறரை காயப்படுத்திவிடுவீர்கள். 13,14,15, மற்றும் 18 ஆகிய தேதிகள் நன்றாக இருக்காது. உடல்நல பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

ராணி
Next Story