2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வருமானம், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. செலவுகள் அதிகரித்தாலும், உங்களை அறியாத சந்தோஷம் உண்டாகும். வேலை, வாய்ப்புகளில் சுமூகமான சூழ்நிலை நிலவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனையும், வருமானமும் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய காதல் மலரும். இரண்டாவது திருமணம் முயற்சிப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். சமூகத்தில் கௌரவம், அந்தஸ்து கூடும். புதிய நட்பு வட்டம் உருவாகும். கலைத்துறையினருக்கு புகழ் கிடைக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கல்வி நிலையில் முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகள் சாதகமாகும். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம் கிட்டும். இந்த வாரம் முழுவதும், விநாயகரையும், நரசிம்மரையும் வழிபடுவது நற்பலன்களைத் தரும்.
