2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உயர் கல்விக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சொந்த வீடு, நிலம், வாகனம், ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். விவசாயத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கு லாபத்தை ஈட்டித் தரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றி பெறும். உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். உறவுகளால் சில மன வருத்தங்களும் பிரச்சினைகளும் ஏற்படலாம். ஆன்லைன் வணிகம் மற்றும் டிரேடிங் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வேலையை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வேலையை இழந்தவர்கள் புதிய வேலைக்கு முயற்சி செய்தால், நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் காதல் நல்லபடியாக இருக்கும். எது எப்படியிருந்தாலும், இந்த வாரம் உங்கள் கௌரவம், அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் முதலீடு செய்ய இது உகந்த நேரம். வெளிநாட்டு தொடர்புகள் மேம்படும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது விரைவில் கிடைக்கும். இந்த வாரம் காளி மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 13 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story