2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பல நற்பலன்கள் காத்திருக்கின்றன. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீடு அல்லது இடம் மாற நினைத்தவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும். உங்கள் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய காதல் மலரும். இதில் ஜாதி, மதம், மொழி ஒரு தடையாக இருக்காது. வேலைவாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்; எதிர்பார்த்த வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் கண்டறியப்படாத நோய்கள் அல்லது செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உறவில் பிரிவினைகள் அல்லது செலவுகள் ஏற்படலாம். வெளிநாட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரம். இந்த வாரம் உங்கள் அந்தஸ்து, புகழ் மற்றும் கௌரவம் கூடும். நட்புறவைப் பேணி வளருங்கள், இல்லையெனில் நல்ல நண்பர்களை இழக்க நேரிடும். இந்த வாரம் முழுவதும் உங்களுடைய இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள் குறிப்பாக விநாயகர் வழிபாடு மிகவும் முக்கியம்.
