2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இதுவரை வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி, குறிப்பாக ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு முன்னேற்றம் உண்டாகும். வேலையை இழந்தவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்துகள் நல்ல விலைக்கு விற்கப்படும். இடம் மாறுதல், ஊர் மாறுதல் போன்ற எண்ணங்கள் நிறைவேறும். வெளிநாட்டிலோ, வெளியூரிலோ படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும். முதலீடுகள் செய்வதற்கு இந்த வாரம் உகந்தது. பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் போன்றவற்றுக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். தொழில்ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், லாபம் குறைவாக இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவாகரத்து கோரியவர்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும். உங்கள் சமூக அந்தஸ்தும், புகழும் கூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியம். சில விஷயங்களைத் தள்ளிப் போடாமல், தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இனம் காண முடியாத நோய்கள் ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். எனவே, இந்த வாரம் விநாயகப் பெருமானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது சிறப்பு பலன்களைத் தரும்.
