2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கல்வி மிகச் சிறப்பாக இருக்கும். உயர் கல்வி மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் அந்தஸ்தும், புகழும் கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளைப் பாதுகாப்பது முக்கியம். மணவாழ்க்கை சுமாராக இருக்கும். பிரிவுகள் அல்லது செலவுகள் ஏற்படலாம். தொழிலில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். லாபம் குறைவாகவே இருக்கும். தடைகள் மற்றும் தகராறுகள் ஏற்படலாம். யூக வணிகங்களில் லாபம் வராது. ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் தொடரலாம். பி.ஆர்., கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் வேலைவாய்ப்புகள் பரவாயில்லை. அரசுப் பணி, தனியார் துறை அல்லது புகழ்பெற்ற நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் கிடைக்கும். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வழக்குகள் இருந்தால் அதிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. அரசாங்கத்தால் நன்மைகள் கிடைக்கும். புதிய காதல் உறவுகள் மலரலாம். சிறு தொழில், சுயதொழில், வீட்டிலிருந்து செய்யும் தொழில்கள் சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்யுங்கள்.
