2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களின் கல்வி நிலை பரவாயில்லை. நீங்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பொருட்கள் இந்த வாரம் சுமாராகவே விற்பனையாகும். லாபமும் குறைவாக இருக்கலாம். பணப்புழக்கம் பரவாயில்லை. உங்கள் அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். புதிய தொழில் தொடங்க அல்லது தொழில் முனைவோராக ஆக இது நல்ல வாய்ப்பு. ஆராய்ச்சி மற்றும் பிஎச்.டி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. தனியார் அல்லது அரசு துறைகளில் இருந்தாலும், உங்கள் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊக்கத்தொகை, போனஸ் போன்ற நிதிப் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. வழக்குகள் இருந்தால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்குப் பயனளிக்கும், உங்களுக்கு பெரிய லாபம் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நட்பு வட்டாரத்தை கவனமாகப் பராமரிக்கவும். மூத்த சகோதரர்-சகோதரிகளுடன் அல்லது குழந்தைகளுடன் பிரிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. சுப காரியங்களுக்காக இந்த வாரம் அதிக செலவு செய்ய நேரிடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் மற்றும் அந்தஸ்து உண்டு. பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். காளி மற்றும் சனி பகவானை வழிபடுங்கள். முன்னேற்றம் உண்டாகும்.

Updated On 1 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story