2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் காத்திருக்கின்றன. உங்கள் ராசிநாதன் குரு நான்காம் இடத்தில் இருப்பதால், தாயாரின் ஆரோக்கியத்திலும் உங்கள் தனிப்பட்ட உடல்நலத்திலும் கவனம் தேவை. புதிய வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. குறிப்பாக இன்டர்ன்ஷிப் தேடுபவர்களுக்கும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்றவர்களுக்கும், நேர்காணல் முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கும் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். ஆனால் வேலையில் கூடுதல் முயற்சி தேவைப்படும். வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாட்களாகக் கடன் கேட்டு காத்திருப்பவர்களுக்கும், வங்கிக் கடனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் இந்த வாரம் எதிர்பாராத விதமாக கடன் கிடைத்து, உங்கள் நோக்கம் நிறைவேறும். வியாபாரம் சுமாரான லாபம் தரும் என்பதால் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு கௌரவமும், அந்தஸ்தும், புகழும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப காரியங்கள் தடைபட்டிருந்தால், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் பழக்கவழக்கங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் அனுகூலமாக இருக்கும். இந்த வாரம் துர்கை மற்றும் விநாயகரை தரிசிப்பது வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

Updated On 15 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story