2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் பொருளாதாரம் பரவாயில்லை. கடன் கேட்டு காத்திருப்பவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்புகள் பரவாயில்லை. நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் திருப்தியுடன் இருப்பீர்கள். இந்த வாரம் எந்த காரியத்தையும் பெரிய அளவில் முயற்சி செய்ய வேண்டாம். எல்லாம் நடப்பது போல தோன்றினாலும் வெற்றி சுமாராகவே இருக்கும். உங்கள் பத்தாம் இடத்தை குருவும் சனியும் பார்ப்பதால் அந்தஸ்தும் புகழும் கூடும். நல்ல நட்புகளை பிரிவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் மூத்த சகோதர-சகோதரிகளுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டிய அல்லது அவர்களை விட்டு பிரிய வேண்டிய காலமாக உள்ளது. வியாபாரத்தில் லாபம் கிடைப்பது போல் தோன்றினாலும் பெரிய அளவில் லாபம் இருக்காது. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பெரிய தொழிலதிபராக, தொழில் முனைவோராக அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். ஆனால் வியாபாரத்தில் பெரிய லாபம் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம். குழந்தைகள் உங்களை விட்டு பிரிந்திருக்க வேண்டிய காலகட்டங்கள் இந்த வாரம் இருக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தாராளமாக செய்யலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும் அந்தஸ்தும் பெரிய அளவில் இருக்கும். பங்குச்சந்தை, வர்த்தகம், ஆன்லைன் வணிகம் போன்றவைகளில் சாதாரண முதலீடுகள் செய்யலாம். துர்கையையும் சனி பகவானையும் வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் பெரிய மாற்றம், முன்னேற்றம் உண்டாகும்.

Updated On 24 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story