2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும், குறிப்பாக நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன்கள் எளிதாகக் கிடைக்கும். இந்தக் கடனைப் பயன்படுத்தி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. வேலை வாய்ப்புகளில் எந்தத் தங்குதடையும் இருக்காது; நீங்கள் வீணாக இருக்க மாட்டீர்கள். இது உங்களுக்கு மன அமைதியை அளிக்கும். தேவையற்ற மனக்குழப்பங்களைத் தவிர்க்கவும். நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுங்கள். வக்கிர சனியின் பார்வை உங்கள் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால், நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து செயல்படவும். யார் நல்லவர், கெட்டவர் என கிரகங்களே உணர்த்தும், அதற்கேற்ப உங்கள் முடிவுகளை அமையுங்கள். நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றியில் முடியும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கல்வி சிறக்கும்; தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சுமார் என்பதால், பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். லாபம் கிடைப்பதாகத் தோன்றினாலும், பணம் கைக்கு வருவதில் தடைகள் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபராக ஆக விரும்புவோருக்கு அற்புதமான வாய்ப்புகள் கதவைத் திறக்கும். நட்பு வட்டாரத்தைப் பேணுங்கள்; நல்ல நண்பர்கள் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சகோதர சகோதரிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம், எனவே பொறுமை அவசியம். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வணிகம், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கை தேவை; உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. ஜாதி, மதம், இனம், மொழி கடந்த புது காதல் உறவுகள் உருவாகலாம். இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் காளியை வணங்குவதன் மூலம் நீங்கள் விரும்பியவை அனைத்தும் ஈடேறும்.

Updated On 8 July 2025 12:32 AM IST
ராணி

ராணி

Next Story