2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பணப்புழக்கம் பரவாயில்லை. கடன் கிடைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை கடன் கிடைத்தாலும், எதிர்பார்த்த பலன் இருக்காது. குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். குழந்தைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நம்பியவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். தொடர்பு கொள்ள விரும்புபவர்களுடன் நேரடியாக பேசுங்கள், இடைத்தரகர்கள் வேண்டாம், இது வாழ்க்கையில் பெரிய வெற்றியைத் தரும். தொழில் சுமாராக இருக்கும். லாபம் குறைவாக இருக்கும். கூட்டாளி தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது, உங்கள் பணம் முடக்கப்படலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, மதிப்பு, மரியாதை கூடும். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வணிகம் போன்ற யூக வணிகங்கள் இந்த வாரம் சாதகமாக இல்லை. எல்லா விஷயங்களிலும் நிதானமாக இருங்கள். வேலையில் வருமானம் இருக்கும். ஆனால், வேலையைப் பற்றிய பயம் இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆராய்ச்சி மற்றும் பி.எச்.டி. செய்பவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். ஸ்டார்ட் அப் கம்பெனி அல்லது தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால், இந்த வாரம் தொடங்கலாம். இந்த வாரம் வருமானங்கள் அதிகமாக இருந்தாலும் செலவுகளும் கூடும். நட்புறவைப் பராமரிக்கவும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். முருகப் பெருமானையும், துர்க்கையையும் வழிபடுங்கள், வாழ்க்கையில் பெரிய மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும்.
