2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும். பெரிய முதலீடுகள் செய்தாலும், லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் தரும், உங்களுக்குப் பயன் இருக்காது. உங்கள் பணமும், பொருளும் முடங்க வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை இந்த வாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு, அல்லது காதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வேலைவாய்ப்புகள் சுமார். வேலை இல்லாமல் இருக்காது, ஆனால் வேலையில் நிறைய போராட்டங்களும், திருப்தியின்மையும் இருக்கலாம். கிடைத்த வேலையை வெற்றிகரமாகச் செய்வது முக்கியம். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்குத் தகுந்த விற்பனை இருந்தாலும், எதிர்பார்த்த லாபம் இருக்காது. திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும். உங்கள் பணமும், பொருளும் மாட்டி கொள்ள வாய்ப்பு உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம், சம்பாத்தியம், புகழ் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தை, வர்த்தகம், ஆன்லைன் வியாபாரம், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எந்த யூக வணிகத்திலும் இந்த வாரம் நிதானமாகச் செயல்படுங்கள். உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் பாதுகாக்கப்படும். இந்த வாரம் முருகப்பெருமானையும், துர்க்கையையும் வழிபடுவது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.
