2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பொறுமையும் நிதானமும் மிக அவசியம். ராசியில் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் சுறுசுறுப்புடன் செயல்படவும். சோம்பேறித்தனத்தைத் தவிர்க்கவும். வருமானம் இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும், கையில் பணம் தங்காது. புதிய முயற்சிகளில் வெற்றி வாய்ப்புகள் குறைவு. எனவே இந்த வாரம் புதிய திட்டங்களைத் தவிர்த்து, வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். உறவுகளில் கவனமாக இருங்கள். உறவுகளைப் பராமரிப்பது முக்கியம். வியாபாரம், சிறுதொழில், சுயதொழில், வீட்டிலிருந்து செய்யும் தொழில், ஆன்லைன் பிசினஸ் என அனைத்துத் தொழில்களும் சுமாராகவே இருக்கும். உற்பத்தியில் லாபம் குறைவாக இருக்கும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக் குழப்பங்களைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலைவாய்ப்பில் சவால்கள் இருக்கலாம், அங்கீகாரம் கிடைக்காத சூழ்நிலைகள் ஏற்படலாம். உங்கள் உழைப்பிற்கு மற்றவர்கள் பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு. எல்லா விஷயங்களிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். உங்கள் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகள் இந்த வாரம் உங்களுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்க மாட்டார்கள். குழந்தைகள் உங்களைப் பிரிந்து செல்லும் காலம் அல்லது நீங்கள் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய வாரம் இது. இருப்பினும், உங்கள் அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். அரசு தொடர்பான காரியங்கள் இந்த வாரம் வெற்றிகரமாக முடியும்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். நட்பு வட்டாரத்தைப் பராமரிப்பது முக்கியம். துர்கை மற்றும் காளி தேவியை வழிபடுவது உடல் ஆரோக்கியத்தையும் வேலை வாய்ப்பையும் மேம்படுத்தும்.
