2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். 6-ம் இடத்தில் செவ்வாய், கேது இருப்பதால் வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். பொருளாதார நிலைமை பரவாயில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இளைய சகோதர, சகோதரிகளால் பிரச்சனைகள், மனவருத்தங்கள் வரலாம். சொத்துக்கள் விற்பதில் தடை இருக்கும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கல்வி நன்றாக இருக்கும். நான்காம் இடத்தில் குரு இருப்பதால் தாயாரின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விற்பனை இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்பு உண்டு. புதிய காதல் மலர வாய்ப்பு உண்டு. ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி தொடர்பு இருப்பதால் உங்கள் அந்தஸ்து, புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். பன்னிரெண்டாம் இடத்தில் ராகு, குரு இருப்பதால் வெளியூர், வெளிநாடுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தாராளமாக செய்யலாம். ஆராய்ச்சி, PHD போன்ற படிப்புகளை தொடரலாம். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் கவனமாக இருங்கள். நண்பர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடலாம். இந்த வாரம் துர்கையையும், பிரம்மாவையும் வழிபடுவது நல்லது.
