2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ஐந்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால், நீங்கள் அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். குணப்படுத்த முடியாத நோய்கள் இருப்பவர்களுக்கு, மருந்தின் அளவு குறையும் அல்லது நோயின் தாக்கம் குறையும். பெரிய அளவில் கடன் இருப்பவர்களுக்கு, கடன் குறைய வாய்ப்பு உண்டு. புதிய காதல் உறவுகள் உருவாகலாம். சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். சமூக சேவையில் இருப்பவர்களுக்குப் புகழும், அந்தஸ்தும், வருமானமும் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கூடும். அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் தானாகவே உருவாகும். உங்கள் நண்பர்களுடன் நல்லுறவை பேணுங்கள். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். ஆராய்ச்சி மற்றும் பிஎச்டி படிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, இந்த வாரம் அவை கிடைப்பதற்கான காலங்கள் உண்டு. கூட்டுத் தொழிலில் உங்கள் பங்குதாரர் லாபம் அடைவார், ஆனால் நீங்கள் நஷ்டம் அடையலாம். உங்கள் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி கிடைக்கும். சொந்தமாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள் முயற்சிக்கலாம். அரசின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மற்றும் உறவுகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். எட்டாம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், அவசரம், அவசியம் இருந்தால் மட்டுமே கடன் வாங்குங்கள். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த வாரம் பைரவர் மற்றும் துர்கையை வழிபடுவது நல்லது.
