2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம், உங்கள் வருமானம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். ஆனால், தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருங்கள். தேவையில்லாத பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, இந்த வாரம் அது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முயற்சிகள் அனைத்திலும் கூடுதல் முயற்சி தேவை. அப்போதுதான் வெற்றி கிடைக்கும். உறவுகளால் நன்மையும், பிரச்சனையும் கலந்தே இருக்கும். சிறு அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் சாதாரணமாக இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். குழந்தைகளுடன் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். வேலைவாய்ப்பில் கவனம் தேவை. வேலை இல்லாமல் இருக்க மாட்டீர்கள். ஆனால், வேலையில் பிரச்சனைகளும், போராட்டங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் அந்தஸ்து, புகழ், செல்வம் பாதுகாக்கப்படும். நட்பை கவனமாகப் பராமரிக்கவும். நல்ல நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிய வாய்ப்புள்ளது. மூத்த சகோதர, சகோதரிகளுக்காக செலவு செய்ய நேரிடும். உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிய வாய்ப்புள்ளது. தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. காதல் உறவுகளில் கவனமாக இருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் வாங்குவதைத் தள்ளிப்போடவும். இந்த வாரம் நீங்கள் துர்கை மற்றும் முருகனை வழிபடுவது நல்லது.

Updated On 30 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story