2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நகை, வீடு, இடம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலம். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வருமானத்திற்கு தகுந்த செலவினங்களும் உள்ளது. ஆரம்பத்தில் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும், இறுதியில் வெற்றி பெறுவீர்கள். யாரை நம்புவது, நம்ப கூடாது என்ற குழப்பம் ஏற்படும். நீண்ட காலமாக விற்பனையாகாமல் இருக்கும் இடம் நல்ல விலைக்கு போகும். தொழில் செய்பவர்களுக்கு சுமாரான காலம். வேலையில் திருப்தி மற்றும் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உண்டு. கடன் கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மற்றும் பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய தன்வந்திரி பகவான் ஆகியோரை வழிபடுவது ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.

Updated On 23 Jan 2024 7:54 AM IST
ராணி

ராணி

Next Story