✕
2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். பணப்பிரச்சினை ஏதும் இல்லை. பெரிய முயற்சிகள் இல்லாவிட்டாலும், அந்த முயற்சிகளால் நற்பலன்கள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தடைகள் உள்ளது. சொத்துக்கள் எதிர்பார்த்த லாபத்திற்கு விற்பனையாக வாய்ப்பில்லை. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருந்து செயல்படுவது நல்லது. உற்பத்தி தொழில் நன்றாக உள்ளது. அம்மாவால் நன்மை உண்டாகும். முதலீடுகள் செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. வேலையாட்கள் அமைவார்கள். சொந்த தொழிலால் லாபம் ஏற்படும். எதிர்பாராத பணம், பொருள் மற்றும் தன வரவு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. பைரவர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

ராணி
Next Story