2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதர-சகோதரிகளால் நன்மை. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. முயற்சிகள் வெற்றியாகும். விற்பனையாகாமல் இருக்கும் வீடு, இடம் ஆகியவை விற்றுப்போகும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறாமல் இருந்தால் நடக்கும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வங்கி கடன் கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். சொந்த தொழில் லாபகரமாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையும். வெளிநாட்டு பயணத்திற்கு முயற்சிக்கலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். சிவன் தலத்தில் இருக்கக்கூடிய பைரவர், துர்கை மற்றும் காளி வழிபாட்டால் முன்னேற்றம் ஏற்படும்.
