2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத விரயம், நஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வாரம் பொருளாதாரம் நன்றாக இருந்தால் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையற்ற வைத்தியச் செலவுகளை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். அவசியம் இருந்தால் பயணம் செய்யுங்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். எல்லாவிதமான உறவுகளுடனும் நட்பை தொடருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை மற்றும் லாபம் இருக்கும். புதிதாக இடம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கிறது. அம்மாவின், அன்பு ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. வேலைவாய்ப்பு நன்றாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், சம்பள உயர்வு உண்டு. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பிரம்மாவை வழிபட்டு வந்தால் பிரச்சினைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.
