2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம், தெய்வ தரிசனம் அமையும். உயர்கல்விக்கு செல்லலாம். பாஸ்போர்ட், விசா கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். செலவீனங்கள் இருக்கும். சொந்த தொழில் மந்தமாக இருக்கும். பார்ட்னர்ஷிப்பில் பார்னர் லாபம் அடைவார். உங்களுக்கு நஷ்டமாகும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளது. வேலையில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கவுரவம், அந்தஸ்து, புகழ் கூடும். மூத்த சகோதர, சகோதரிகளுக்கு செலவுசெய்ய நேரிடும். தோழிகள் பிரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. கம்பெனி மாற நினைப்பவர்கள், ஆன்சைட்டுக்கு முயற்சிப்பவர்கள் இந்த வாரம் முயற்சிக்கலாம். நீண்ட பயணம் மேற்கொள்ள சாதகமான சூழல் அமையும். கலைத்துறை, அரசாங்கம், விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் இருக்கும்.
