✕
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சுய தொழில் நன்றாக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்பவர்களுக்கு அதிருப்தியே கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி பிஸினஸ் செய்பவர்களுக்கு நிலுவையில் இருக்கும் பணங்கள் கிடைக்கும். கம்பெனி மாற நினைப்பவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளலாம். எப்போதும் கையில் பணம் இருக்கும். எனவே முதலீடு செய்வது நல்லது. வேலை நிமித்தமாக இடமாற்றம் அல்லது வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. உயரதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வாய்ப்புகள் உண்டு. எதிரிகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. விநாயகர் தரிசனம் நல்லது.

ராணி
Next Story