✕
2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக நகை வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்பவர்களுக்கு பார்ட்னர் அதிருப்தியுடன் இருப்பார். தேவையற்ற முயற்சிகள் வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற வருமானம் உண்டு. காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். ப்ரேக் - அப் ஆனவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகள் வேண்டாம். வேலை உயர்வுக்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிர்பாராத பிரயாணங்கள் அமையலாம். கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும்.

ராணி
Next Story