2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சின் மூலமாக நல்ல வருமானம் வரும். நீண்ட நாட்களாக ஆடை, ஆபரணங்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம், சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தரும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் ஏற்படும். உற்பத்தி துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் இருக்கும். ஆட்டோ மொபைல், மோட்டார் தொழில், கெமிக்கல், இண்டஸ்ட்ரியல் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு தொழில் சுமாராக இருக்கும். மணவாழ்கை பரவாயில்லை. வேலையில் எதிர்பார்த்த அதே நேரம் எதிர்பாராத முன்னேற்றம் இரண்டும் அமையும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்பவர்கள் அதில் வெற்றி பெறுவீர்கள். சிவன் மற்றும் பெருமாள் கோவிலில் இருக்கும் தன்வந்திரி பகவான் வழிபாடு ஏற்றம், முன்னேற்றத்தை தரும்.
