2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நினைப்பவை அனைத்தும் நடக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் ஏதோ ஒரு ரூபத்தில் உதவி செய்வார்கள். நண்பர்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அவர்களால் உங்களுக்கு மேன்மை உண்டு. பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நன்றாக உள்ளது. பெரிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பயணம், அதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் இருந்து கொண்டே இருக்கும். அம்மா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் மற்றும் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். வேலையை பொறுத்தவரை சம்பள உயர்வு, பணி உயர்வு என அனைத்து முன்னேற்றங்களும் உண்டு. கடன் வாங்க விரும்பினால் வாங்கலாம். கடனின் தன்மை அதிகமாக இருந்தால் நோயுடைய தன்மை குறைவாக இருக்கும். உயர்கல்வியை தொடரலாம். சிவன் தலத்தில் இருக்கக்கூடிய நந்தி மற்றும் பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபடுவது நன்மையை தரும்.
