2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானத்திற்கு தகுந்த செலவுகள் ஏற்படும். பண வசதி, பொருளாதார வசதி இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இதனால் தேவையற்ற செலவுகள் குறையும். பேச்சின் மூலமாக சம்பாத்தியம் உண்டு. புதிய முயற்சிகள் வேண்டாம். பெரிய அளவில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமுடன் எடுத்து வைப்பது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து செயல்படுவது சிறந்தது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு 7-ஆம் தேதிக்கு பிறகு நன்றாக இருக்கும். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் எதுவாக இருந்தாலும் சுமாராக உள்ளது. வேலையில் எதிர்பார்க்கும் அனைத்து முன்னேற்றங்களும் உண்டாகும். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். உடம்பில் சிறு பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கணவன் அல்லது மனைவி இருவரில் யாரோ ஒருவருக்கு தேவையில்லாத செலவுகள் ஏற்படும். ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபடுவது நல்லது.
