2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக மனைவி அல்லது குழந்தைகளுக்காக செலவு செய்வது நல்லது. சொந்த தொழில் பரவாயில்லை. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். காதல் வெற்றியடைய வாய்ப்பில்லை. ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வெளிநாட்டு தொடர்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் பிரச்சினைகள் இல்லை. நல்லதொரு முன்னேற்றங்கள் உண்டு. வயதானவர்களாக இருந்தாலும் வேலை கிடைக்கும். கேட்ட இடத்தில் எல்லாம் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். ஏனென்றால் எதிரிகளால் தேவையில்லாத பிரச்சினைகள், போராட்டங்கள் வரும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். உயர்கல்வி நன்றாக இருக்கும். கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நீங்கள் நினைப்பது நடப்பதில் தடை இருந்தாலும், இறுதியாக வெற்றி பெறுவீர்கள். கருடாழ்வார், நரசிம்மர், துர்கை ஆகியோரை வழிபடுவது சிறந்தது.

Updated On 19 March 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story