2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், இருந்தால் கூட செலவினங்கள் இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகள், மனைவி, உறவுகளுக்காக செலவு செய்வீர்கள். நீண்ட நாளாக விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். வீடு மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. நெருங்கிய உறவினர்களை பிரிந்து இருப்பீர்கள். அவர்களால் நன்மையும் உங்களுக்கு இருக்கிறது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை உண்டாகும். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த விற்பனை இருந்தாலும் லாபம் பெரிதாக இருக்காது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். தொழில் விட்டு விட்டு நடக்கும். வேலையை பொறுத்தவரை பிரச்சினை ஏதும் இல்லை. வேலையை விட்டு வெளியே வந்திருந்தாலும், வெளியேற்றப்பட்டு இருந்தாலும், வேலை தேடிக்கொண்டிருந்தாலும் கண்டிப்பாக வேலை கிடைக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முருகன் மற்றும் சனிபகவானை வழிபடுவதன் மூலம் ஏற்றம், முன்னேற்றம் கிடைக்கும்.
