2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களது பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. இல்லையென்றால் தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும். சொந்த தொழில் பரவாயில்லை. உங்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சுமாராக இருக்கும். பெரிதாக வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. தேவை இல்லாத முயற்சிகள் வேண்டாம். உங்களது கிரக நிலைகள் இன்னும் சரியாகவில்லை. இந்த வாரம் முழுவதும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாரையும் நம்பாதீர்கள். நாம் எதிர்பார்த்த செய்திகள் தாமதமாகும். செய்யக்கூடிய காரியங்களில் தடைகள் ஏற்படும். தேவையில்லாத குழப்பம், நிம்மதியற்ற சூழ்நிலை போன்றவை இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், லாபம் இருக்கிறது. வேலை பரவாயில்லை. உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் இருக்கிறது. கடன் கிடைக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். அப்பாவால் நன்மைகள் உண்டு. முருகன் மற்றும் சனிபகவான் வழிபாடு, வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

Updated On 16 April 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story