2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களது பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். இளைய சகோதர - சகோதரிகள் இருந்தால் அவர்களுக்காக செலவு செய்வீர்கள். அவர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதே நிலைதான் உங்கள் உறவினர்களோடும் இருக்கும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் சுமாராக இருக்கும். அதிலும் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். விவசாயம் சார்ந்த துறைகள் லாபகரமாக இருக்கும். லோன் கேட்டு விண்ணப்பித்தால் கிடைக்கும். எந்த காரண காரியத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ அது அத்தனையும் முழுமையடையும். வழக்குகள் இருந்தால் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் அதிலும் வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். தொழில் முனைவோராக வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களது நெருங்கிய நட்பு வட்டாரம் உங்களை விட்டு பிரிந்து போக வேண்டிய காலம். ஷேர், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். நவக்கிரக வழிபாடு, வாழ்க்கையில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.

Updated On 23 April 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story