2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதர ரீதியாக சிறப்பாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது. உறவுகளால் ஒருபக்கம் நன்மை, மற்றொருபுறம் தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படும். சிறு தொழில், சுயதொழில் மற்றும் வீட்டில் வைத்து தொழில் செய்பவர்கள் அடக்கி வாசியுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. கல்வியில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். வேலையை பொறுத்தவரை எந்தத்துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும், முன்னேற்றம், பணி உயர்வு போன்ற அனைத்தும் கிடைக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு தொழில் பரவாயில்லை. ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் போன்றவற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் அது இந்த வாரம் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். கடன் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரம் விநாயகர் மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபாடு செய்தால் மிகப்பெரிய மாற்றம், முன்னேற்றம் ஏற்படும்.
