2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கையில் பணம், தனம் இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏதும் இல்லை. மணி ரொட்டேஷன் இருப்பதால் நீண்ட நாட்களாக ஆடை, ஆபரணங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அவரால் நன்மைகள் உண்டு. புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை, லாபம் இருக்கிறது. காதல் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். கலைத்துறையில் இருந்தீர்கள் என்றால் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் காண்பீர்கள். வேலையை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. ஏதோவொரு வேலை இருக்கும். கடனுக்கு முயற்சி செய்திருந்தால் கடன் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழில் செய்பவர்கள் லாபம் அடைவீர்கள். பார்ட்னர் நஷ்டம் அடைவார். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் முயற்சிக்கலாம். உயர்கல்வி பரவாயில்லை. ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். ஏற்கனவே அதுதொடர்பாக படித்துக்கொண்டிருந்தால் தேர்ச்சி பெறுவீர்கள். பைரவர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் கருடாழ்வாரை வழிபடுவதன் மூலம் கெடுபலன்கள் குறையும்.

Updated On 6 May 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story