2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடையும். வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நினைத்த காரியங்கள், நினைக்காத காரியங்கள் இரண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு உங்களின் தைரியம், தன்னம்பிக்கை அவசியம். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் எதிர்பாராத பயணத்தால் நன்மைகள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருந்தாலும் லாபம் இல்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவோ அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கவோ வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கை நன்றாக உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கடன் கிடைக்கும். வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தால் கிடைக்கும். ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்றுவர பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப் கேட்டு விண்ணப்பித்திருந்தால் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். வாரம் முழுவதும் விநாயகர் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் ஏற்றம், முன்னேற்றம் அமையும்.
