2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் நினைப்பது நடக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு வகையில் வெற்றி பெறுவார்கள். தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக சந்தித்து பேசுங்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அத்தனையும் இருக்கிறது. புதிய காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் வீடு, இடம் விற்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. நீங்கள் முற்றிலும் புதிய சூழ்நிலைகள், புதிய இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் பிசினஸ் போன்றவை செய்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. வேலையில் முன்னேற்றம், பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை உண்டு. புதிய வேலையும் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கிடைக்கும். உங்களின் எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். நேர்காணலில் பங்கு பெற்றிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். புதிய நட்பு வட்டாராம், அந்நியமொழி பேசும் நண்பர்களால் சகாயம், சகோதர - சகோதரிகளால் நன்மை ஆகியவை ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கும். கலைத்துறையில் இருந்தால் ஏற்றம், முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபாடு செய்யுங்கள். பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை தரிசனம் செய்யுங்கள். ஏற்றம், முன்னேற்றம் அமையும்.
