2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் ஏதோவொரு வகையில், உங்களுக்கு சாதகமாக இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இறைவனின் அனுக்கிரகம் உங்களுக்கு இருப்பதால், அவர் துணை இருந்து உதவி புரிவார். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உதவி செய்வார்கள். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு, இடம், ஊர் மாறுவதற்கான சூழ்நிலைகள் இந்த வாரம் உண்டு. விற்பனையாகாமல் இருந்த உங்களின் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் அதற்கு தகுந்த வருமானங்கள் இருக்கின்றன. கல்வியில் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பார்ட்னர்ஷிப்போடு தொழில் செய்பவர்களுக்கு இரண்டு தரப்பிலும் லாபம் இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். வெளியூர், வெளிநாட்டில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாரம் முழுவதும் சிவன் தரிசனம் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் தாயாரை வழிபாடு செய்தால் ஏற்றம் கிடைக்கும்.
