2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கல்வி சிறப்பாக உள்ளது. வீடு, இடம் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் நன்றாக உள்ளன. சொந்த தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். எந்த தொழில் செய்தாலும் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். வேலையில் உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் உண்டு. சம்பள உயர்வு, பணி உயர்வு, பணப் பலன்கள் போன்றவையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக இருக்கிறது. வெளிநாட்டில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்க்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரத்தில் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவர் மற்றும் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபாடு செய்யுங்கள். முன்னேற்றம் ஏற்படும்.
